அண்ணா பிறந்த நாளையொட்டி 700 சிறைக்கைதிகள் விடுதலை செய்ய ஏதுவாக முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆனை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன் பிரகாரம் நீண்ட நாட்களாக விசாரனை கைதிகளாகவே சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்கள் குறித்த பட்டியல் இல்லை.
இதனால் விரக்தி அடைந்த சிறைவாசிகள் குடும்பத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் சமுதாய அமைப்பினர் சிறைவாசிகளின் விடுதலை குறித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் அமைச்சர்களை நியமித்து மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று வருகிறார்கள்.
அதன்படி அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறிய விழா ஒன்றில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
பல்வேறு கோரிக்கைளை பொதுமக்கள் மனுக்களாக கொடுத்தனர்.
அதில் குறிப்பாக அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கட்டமைப்பு சார்பில் சாலை வசதி,திடக்கழிவு மேலாண்மை, மீனவர்கள் பகுதிக்கு சாலை வசதி ஆகியவை அடங்கிய கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
இதுபோக சிட்னி விளையாட்டு அணியினர் சார்பில் விளையாட்டு மைதான கோரிக்கையை மனுவாக அளித்தனர்.
இதுதவிர திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் மெத்தனம் காட்டி வருகிறது.
இதனை அரசியல் கட்சிகள் பொதுமக்கள் கண்டித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினம் வருகை தந்த அமைச்சர் அவரிடம் பெரும்பாலான மக்கள் அதிகளவில் சிறைவாசிகள் விடுதலையில் அரசு பாரபட்சம் பார்க்க கூடாது என்றும் இப்போது விடுதலை இல்லை என்றால் எப்போதும் இல்லை என உரிமையான கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்துள்ளனர்.
மனுக்கள் அதிகாரிகள் மூலமாக பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

