அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதனை அவதானித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் இச்சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். சிறுவர்களை ஃபாலோ செய்த சமூக ஆர்வல இளைஞர்கள் பொறிவைத்து பிடித்தனர். அப்போது அச்சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளிக்கிறது.
அதாவது…
டேய் என்னாடா பன்னுறீங்க?
கேம் விளையாடுறோம் காக்கா….
பொய் சொல்லாதீங்கடா…..
டேய் பாமில்…நீ சொல்லுடா என்னா பாத்தீங்க?
அவன்தான் ட்ரிபுல் எக்ஸ் படம் காட்டுனான்…
அப்டின்னா என்னாடா அது…?
கெட்டப்படம் காக்கா…
டேய் யார்ட போனுடா இது?
எங்க வாப்பாட போனு காகா அப்படினு அழுதுட்டே சொல்லிருக்கான் பய ….
நடங்கடா வீட்டுக்கு என ஆளுக்கொரு அடியை வச்சி வீட்டில் ஒப்படைத்து விபரத்தை கூறி சென்றுள்ளார்கள் அந்த சமூக ஆர்வலர்கள்.
விசாரணையில் … இச்சிறுவனின் தகப்பனார் இரவு வேளைகளில் நீலப்படம் பார்க்கும் பழக்கமுடையவர் என்றும், அவரின் செல்போனை இச்சிறுவர்கள் வாங்கி கேம் விளையாடுவதும், அதில் நீலப்படம் பார்த்த அவனது தகப்பனார் டேப்பை குளோஸ் செய்யாமல் விட்டுவிடுவதும் இதனை கண்ட சின்னஞ்சிறு பிள்ளையின் தவறான பாதைக்கு இட்டு சென்றதும் தெரியவருகிறது.
எச்சரிக்கை!