154
அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்று அனைத்து பணிகளும் துரிதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆணையரை மரியாதை நிமித்தம் சந்திக்கும் நிகழ்வும் தொடர்கிறது.
அந்த வகையில் அதிரை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தமீம் அன்சாரி தலைமையிலான குழு ஒன்று ஆணையரை சந்தித்து பேசினர்.
அப்போது நகரில் நிலவும் சுகாதார சீர்கேடு,சாலை உள்ளிட்டை அடிப்படை கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்கிட வேண்டும் என கேட்டுகொண்டார்.
இந்த சந்திப்பின் போது கட்சியின் துணைத் தலைவர் சாமி நாராயண சாமி சிறுபான்மையினர் அணி அப்துல் மாலில் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.