Home » ரயில் முன்பதிவு மையம் வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு !

ரயில் முன்பதிவு மையம் வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு !

0 comment

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அகலப்பாதை பணிகள் 100சதவீதம் முடிவடைந்து உள்ளன.

சென்னை- காரைக்குடி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பும் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதனிடையே திருவாரூர்-காரைக்குடி இடையே DEMU ரயில் இயக்கப்படுகிறது.

இம் மார்க்கத்தில் போதிய கேட் கீப்பர்கள் இல்லாததால் அனைத்து லெவல் கிராசிங்கிலும் இரயிலை நிறுத்தி கேட் போடப்படுகிறது

இதனால் கால விரயம் ஏற்படுகிறது என்ற காரணத்தால் அவ்வளவாக வரவேற்பு இல்லை.

இருப்பினும் அரசு போர்கால அடிப்படையில் கேட் கீப்பர்கல்ளாக ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களை அமைர்த்த ஆணையிட்டு பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் நிரந்தர கணினி முன் பதிவு மையம் அமைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கத்திடம் அதிராம்பட்டினம் 16வது வார்டு திமுக செயலாளர் முகம்மது யூசுப் அதிரைக்கு கனினி இரயில் முன்பதிவு மையம் வேண்டும் என மனு அளித்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட பழனிமாணிக்கம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உரிய இலாக்காவிற்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter