அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக ஆண்டு மாபெரும் மெகா கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 29.12.2021 புதன்கிழமை கிராணி மைதானத்தில் துவங்கியது.
ஒரு லட்சம் ரூபாய் தொகைக்கும் அதிகமான பரிசுத் தொகைகளுடன் சிட்னி கிரிக்கெட் கிளப்பின் தொடர் போட்டி அதிரை கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்த மெகா பரிசு தொகைகள் கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹.50,000/- ரொக்கமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ₹.30,000/- ரொக்கமும், மூன்று மற்றும் நான்காமிடம் பெரும் அணிக்கு தலா ₹.15,000/- ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் 6 ம் தேதியன்று நாமக்கல்லில் NSDF (School Games & Activity Development Foundation) சார்பாக மாநில அளவிலான (UNDER 25) 25 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் சிட்னி அணியை சேர்ந்த இளம் வீரர்கள் பங்குபெற்ற சான்றிதழ்களை இத் தொடர் போட்டிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
முன்னதாக இன்றைய முதல் நாள் போட்டியை சிறப்பு விருந்தினர்கள் புடை சூழ “திராவிட முன்னேற்ற கழகத்தின்” நகரச் செயலாளர் இராமகுணசேகரன் பந்து வீசி போட்டியினை துவக்கி வைத்தார்.
இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த அதிரை ASC அணி 18 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.



