Thursday, April 18, 2024

அதிரை: பகலிலும் கடிக்கும் பயங்கர கொசுக்களால் டெங்கு பரவுகிறது !

Share post:

Date:

- Advertisement -

தனிக்கவனம் செலுத்த பொதுமக்கள் கோரிக்கை !!

தமிழகத்தில் பெய்த கன மழையினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேங்கிய மழைநீர் வடிந்தபாடில்லை.

இதனால் கொசுக்கடிக்கு நடுவே பாடம் நடத்தும் அவலம் நீடிக்கிறது.

நன்னீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு பரவும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டு தேங்காய் ஓடு,டயர் போன்றவற்றில் நீர் தேங்கி இருக்கிறதா என ஆய்வு செய்யும் அதிகாரிகளின் கண்ணில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மட்டும் புலப்படவில்லை.

இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் நகரெங்கும் பரவி மக்களை கடித்து துவம்சம் செய்து வருகிறது.

இதனால் நகரில் பலருக்கும் டெங்கு பரவி வருகிறது.

பச்சிளம் சிறார்களையும் விட்டுவைக்காத கொசுக்களால் டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொசுக்கடியால் பாதிக்கப்படும் மக்களுக்கு டெங்கு நோய் பரவும் சூழல் உருவாகி இருப்பதால் கொசுக்களை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...