67
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏறிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் குப்பை தொட்டி அமைக்கும்படி பிலால் நகர் இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.சங்க வரைவுரைக்கு அப்பாற்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் சுற்றுசூழலை காக்கும் விதத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இன்று (05/12/2017) காலை 10:00மணியளவில் மூன்று இடங்களில் குப்பைத்தொட்டிகளை அமைக்கப்பட்டது.இந்நிகழ்வில், சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி.எம்.எஸ். அபூபக்கர் , சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு செயலாளர் எம்.எப்.முகம்மது சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் பிலால் நகர் பகுதி இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்