தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுசூழல் மன்றம்90.4ன் சார்பில் இன்று(05/12/2017) மாலை சுமார் 04:30 மணிக்கு பட்டுக்கோட்டை சாலையில் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகில், தூய்மையான அதிரையை உருவாக்க, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வழங்க குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அதிரை சுற்றுச் சூழல் மன்ற 90.4 தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மீனா குமாரி அவர்கள் முன்னிலை வகித்தார்.சுற்றுசூழல் மன்ற செயலர் எம்.எப்.முகம்மது சலீம் , இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். பள்ளி நிர்வாக அலுவலர் கே.அஷ்ரப் அலி, சுற்றுசூழல் சங்க உறுப்பினர் அ. அக்லன் கலீஃபா, தூய்மை தூதுவர் எஸ். சமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.