அதிராம்பட்டினம் பிரதான சாலையில் உள்ளது பிரபல மொத்த விற்பனை கடை.
கொரோனா கால விடுமுறையை கழிக்க சிறார்கள் இணைந்து வீட்டோரக்கடை ஒன்றை நடத்துகின்றனர், அந்தக்கடையில் விற்பனைக்காக ஒரு நிறுவனத்தின் பாப்பின்ஸ் மிட்டாயை மேற்குறிப்பிட்ட கடையில் வாங்கியுள்ளனர்.
வீட்டிற்கு வந்து டப்பாவை திறந்து பார்த்த போது அடைக்கப்பட்ட மிட்டாய்கள் உருகி இருந்ததும் அதிலிருந்து புழுக்கள் நெளிவதை கண்ட அந்த சிறுவன் சம்பந்தப்பட்ட கடைக்கு பொருளை கொண்டு சென்றுள்ளான்.
ஆனால் கடைகாரரோ, விற்பனை செய்த பொருள் திரும்ப பெறுவதில்லை எனவும், அச்சிருவனை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அச்சிறுவன் அங்கிருந்து சிலரிடம் சட்ட உதவியை நாடியுள்ளான்.
அதன்பேரில் தஞ்சை உணவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளான்.
அதிகாரிகளின் வழிகாட்டுல் பிரகாரம் பட்டுக்கோட்டை FSSAI அதிகாரிக்கும் குறுஞ்செய்தியை ஆதாரத்துடன் அணுப்பியுள்ளான்.
அதோடு நிற்காமல் நகர காவல்துறையிடம் புகார் அளித்து சம்பந்தப்பட்ட கடைக்காரரை கண்டிக்க வைத்ததோடு கவனக்குறைவாக காலாவதியான பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறுவனின் துணிச்சலான நடவடைக்கையை காவல் துறையினரும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.