அவாள்கள் அதிகமுள்ள மயிலாப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செம்மையாக செய்து கொடுத்துள்ளன.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மன்னடி,பெரியமேடு,புதுப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளை அரசு மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்த்து வருகின்றன.
இதற்கு வழு சேர்க்கும் விதமாக மண்ணடி செம்புதாஸ் தெரு சந்திப்பு, அங்கப்ப நாயக்கன் தெரு, ஜோன்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் ஆறு போல ஓடுகிறது.
இதனால் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஐவேலை தொழுகையை பள்ளிகளுக்கு சென்று நிறைவேற்ற தயங்குவதுடன் தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமையான சுகாதாரத்தை அரசு வழங்க மறுப்பது வேதனை அளிப்பதாகவே அப்பகுதி வாழ் மக்கள் கருதுகின்றனர்.
எனவே சென்னை மாநகராட்சி மேற்காணும் இடங்களில் சாலையில் ஓடும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைத்திட வேண்டும் என மண்ணடி வாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவாளை போல்
இவாளையும் கணக்கில் கொண்டால் நன்னாயிருக்கும்.