Home » அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி : டைட்டில் வின்னர் யார்?

அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி : டைட்டில் வின்னர் யார்?

by admin
0 comment

அதிரை வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியை சிட்னி கிரிக்கெட் கிளப் கடந்த டிசம்பர் மாதம் (29.12.2021) புதன்கிழமை துவங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர்.

15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இத் தொடர் போட்டி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் PCC பட்டுக்கோட்டை – VAA NANBA CC மதுரை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இந்த தொடர் போட்டியை அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் YouTube பக்கத்தில் அனைத்துப் போட்டிகளையும் சிறந்ததொரு வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பை சிட்னி கிரிக்கெட் நிர்வாகம் செய்து வருகிறது.

பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த மாபெரும் கிரிக்கெட் தொடரை சிட்னி கிரிக்கெட் அணி நடத்தி வருவது பாராட்டிற்குரியது என அதிரை விளையாட்டு பிரியர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter