தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் ஊர்களில் அதிரையும் ஒன்று. இங்கு அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு வரை இஸ்லாமியர் பேரூர்மன்ற தலைவராகவும், இஸ்லாமியர் அல்லாத ஒருவர் துணை தலைவராகவும் வருவது வழக்கமான மரபு. ஆனால் அதிரை, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு மறுவரையரை செய்யப்பட்டதில் மக்கள் தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் வார்டுகளின் எண்ணிக்கையை 21ல் இருந்து 33ஆக நிர்ணயிக்காமல் மொத்தமே 27ஆக குறைத்துவிட்டனர். இப்போதைக்கு அதிரையின் எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ஏரிபுறக்கரை, நரசிங்கபுரம் உள்ளிட்ட ஊராட்சிகள் அதிரை நகராட்சியுடன் இணைக்கப்படும். அப்போது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அரசியல் பிரதிநிதிதுவத்தில் (வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில்) சிறுபான்மை என்ற நிலையை அடைந்துவிடுவர். இதனை தற்போதே சரி செய்து உடனடியாக இஸ்லாமியர்களுகான உரிய பிரதிநிதிதுவத்தை பெற்றாக வேண்டும். அதிரையில் உள்ள 7 ஜமாத்களும் ஓரணியில் திரண்டு சட்ட போராட்டம் நடத்தினால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்ய தவறினால் எதிர்கால சந்ததிகள் அரசியல் பிரதிநிதிதுவத்தை இழந்த அகதிகள் ஆகிவிடுவர். இதனால் முன்னோர்களை அவர்கள் வசைபாட கூடும்.
20 ஆண்டுகளில் அதிரையில் பெரும்பான்மையை இழக்கபோகும் இஸ்லாமியர்கள்! 7 ஜமாத்களும் தெளிவாக செயல்படாவிட்டால் சரிவு நிச்சயம்!!
102
previous post