Home » அதிரை AFCC கிரிக்கெட் அணியின் 2022 ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்வு.!!

அதிரை AFCC கிரிக்கெட் அணியின் 2022 ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்வு.!!

0 comment

கடந்த 16 வருடங்களாக அதிரை மட்டுமல்லாது வெளியூர்களிலும் அதிரை AFCC கிரிக்கெட் அணி பல தொடர்களில் விளையாடி வருகிறது. (TNCA – TamilNadu Cricket Association) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே கிரிக்கெட் அணியாகவும், தஞ்சை மாவட்ட அளவிலான டிவிசன் போட்டியிலும் இரண்டாமிடம் பெற்று அதிரை நகருக்கு பெருமை சேர்த்து வருகிறது.

அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியின் நிர்வாக குழு இன்று அதிரையில் நடைபெற்றது.

இந்த நிர்வாக குழுத் தேர்வில் AFCC அணியின் நிர்வாக குழு தலைவராக கிஜார், துணைத் தலைவராக ஹுசைன், செயலாளர் டைனமிக் தாஜுதீன், துணைச் செயலாளர் ஹாபிழ் அலாவுதீன், பொருளாலர் இல்முதீன், துணைப் பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் AFCC அணிக்கு புதிய அணித் தலைவராக பயாஸ் அகமது, துணை அணித் தலைவராக (பவுலர்) இஸ்ஹாக் நிர்வாக குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த 2022 வருடத்திற்கான 17ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டியினை எதிர்வரும் மே 13.05.2022 வெள்ளிகிழமை நடத்த உள்ளதாகவும் AFCC அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter