அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் பகுதியாக உள்ளது.
பிலால் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இப்பகுதி மக்கள் பெறுவதில்லை.மேலும் பிலால் நகர் ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்டது.இந்த பகுதியில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்கி இருப்பதால் பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.மேலும் இந்தபகுதி மக்களை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும்,சரியான சாலைகள்,மின்விளக்குகள்,குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
ஏரிப்புறக்கரை ஊராட்சியிலிருந்து எந்தவொரு அதிகாரிகளும் பிலால் நகர் பகுதியை ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.