கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமை வரவேற்று அப்போது அவரது அணியில் இருந்த அப்துல் ஜப்பார் துல்கர்ணை என்பவர் அடித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள அப்துல் ஜப்பார் துல்கர்ணை, ஏலெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநில திமுக-காரரால் பாதிக்கப்பட்டபோது எஸ்.எச்.அஸ்லமின் தலைமையை ஏற்று செயல்படலாம் என நினைத்து சம்மந்தப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரின் போக்கு பிடிக்காததால் விலகிவிட்டதாக கூறும் அப்துல் ஜப்பார், தன் குடும்பமே திமுக குடும்பம் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். மனிதன் தவறிழைப்பது இயற்கையே என்றும் அன்றைய தினமே முடிவெடுத்து தனியே செயல்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
திமுக-காரரால் பாதிக்கப்பட்டேன்! அதிரை அப்துல் ஜப்பார் துல்கர்ணை உருக்கம்!!
69