73 வது குடியரசு விழா நாடெங்கிலும் சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா பெருந் தொற்று காரணமாக குறைந்தளவு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியினை ஏற்றி சிறப்பு செய்தனர்.
அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் MKN அறக்கட்டளையின் சலாஹியா அரபிக் கல்லூரி, காதிர் முகைதின் இருபாலர் பள்ளி, காதிர்முகைதீன் கல்லூரி ஆகிய கல்வி ஸ்தாபனங்களின் தாளாளர் முகம்மது மீராசாகீப் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக கல்லூரியின் NCC மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
இதில் பேசிய தாளாளர்,கொரோனா பெருந்தொற்றில் உலகமே சிக்கி கொண்டுள்ள இந்த நேரத்தில் நாம் இந்த குடியரசு தினத்தை நாம் கடைபிடித்து வருகிறோம்.
இத்தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் நாட்டின் மீதுபற்று கொண்ட ஒப்பெருவரும், இந்நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்கு பெற வேண்டும் எனவும், இப்பெருந் தொற்று அகன்று மக்கள் சுபிச்சமுடன் வாழ வாழ்த்துவதாக தெரிவித்தார்.
விருந்தினர்களை செய்யது அகமது கபீர் வரவேற்றார்.கணித வியல் துறை வீரபாண்டியன் கருத்துறையை வழங்கினார்.
இதுதவிர MKN அறக்கட்டளை உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல அதிரை நகரில் நடந்த குடியரசு கொடி யேற்று விழாவின் நிகழ்வின் தொகுப்புகளை காண்போம்.
அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் காலை 7:30மணிக்கு சங்க வளாகத்தில் அதன் தலைவர் —– கொடியேற்றி சிறப்பித்தார்.
பெரிய ஜீம்ஆ பள்ளி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் MMS அப்துல் கரீம் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றினார்.PMK. தா ஜீதீன். அவர்கள்
கிழத்தெரு சங்க தலைவர் தாஜீதீன். அவர்கள் S. சேக் தாவூது. அவர்கள் A. சேக் ஜலாலுதீன். அவர்கள் மற்றும் அதிரை முக்கியஸ்தர்கள் மற்றும் அனைத்து ஆட்டோ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் தமீம் அன்சாரி அலுவலகம் அருகே கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
முஸ்லீம் லீக் நகரம் சார்பில் கொடியேற்றி சிறப்பு செய்தனர்.
இது தவிர மிஷ்கின் பள்ளியின் மதர்சா நிர்வாகம் சார்பில் காலை 7:30 மணிக்கு கொடியேற்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா பெருந் தொற்று அகல பிரார்த்திக்கபட்டது.
அதிரை பைத்துல்மால் சார்பில் அதன் அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினர்.
இதனுடன் அனைத்து அரசு,தனியார் பள்ளிகளிலும்,அரசு அமருத்துவமனை, நகராட்சி அலுவலகம்,காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.
அரசின் கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையான முறையில் நடந்தது குறிப்பிடதக்கது.




