48
அதிரை நகராட்சி தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களைவிட இஸ்லாமிய சமூதாய கட்சிகளின் வேட்பாளர்களுக்கான ஆதரவு அலை வீசுவதை உள்ளூர்வாசிகளின் பேச்சுக்கள் மூலம் கணிக்க முடிகிறது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சி அதிரை நகராட்சி தேர்தலில் 20 வார்டுகளில் போட்டியிட தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.