Home » ELECTION BREAKING :அதிரை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முஸ்லீம் லீக் !

ELECTION BREAKING :அதிரை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முஸ்லீம் லீக் !

by
0 comment

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் வெப்பத்தால் அதிரையே அனல் பறக்கிறது.

திமுக கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்பட்ட, முஸ்லீம் லீக அனைத்து தேர்தலிலும் கூட்டணி அமைத்தே களம் கண்டு வருகிறது.

அதேப்போல நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியாக களம் அமைத்து போட்டியிட அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக தமக்கு சாதகமான வார்டுகளை கேட்டு கடிதம் வழங்கியதாக தெரிகிறது.

இதனை செவி ஏறகாத நகர திமும வழக்கம்போல ஒரு சீட்டை கொடுத்து தக்கவைக்க முயற்ச்சித்துள்ளது.

இதனால் அக்கட்சியினர் கடுமையான ஆட்சோபனைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து நகர திமுகவிடம் கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. ஆனால் கூட்டணிக்காண கதவு சாத்தப்பட்டு விட்டன.

இதனால் விரக்தியடைந்த முஸ்லீம் லீக் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதன்படி வார்டு எண் 13 மற்றும் 6வது வார்டுகளில், ஏணி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

அடுத்த காட்டமாக விருப்பமனு அளித்தவர்களின், ஒப்புதல் பெற்று கூடுதல் வார்டுகளை விரைவில் அறிவிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter