Home » அதிரைக்கு முன்னுதாரணமாகும் முத்துப்பேட்டை : ஆழ்ந்த உறக்கத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு!!

அதிரைக்கு முன்னுதாரணமாகும் முத்துப்பேட்டை : ஆழ்ந்த உறக்கத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு!!

0 comment

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு  சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று  மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது.

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டுகளில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 8 வார்டுகளில் SDPI கட்சிக்கு 5 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 வார்டுகளும் ஒதுக்கி இந்த கூட்டமைப்பு ஒருங்கிணைந்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் காலங்களில் இது போன்ற நல்ல முன்னெடுப்புகளை செய்துள்ள முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் இயக்கங்களின் கூட்டமைப்பு, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் அதிரைக்கு சிறந்த முன்னுதாரணத்தை காட்டியிருக்கிறது என எல்லோராலும் பரவலாக பேசப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சியில் நல்லாட்சி மலர வேண்டுமெனில் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் இயக்க கூட்டமைப்புகளை பார்த்தாவது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தூக்கத்திலிருந்து விழித்து ஆக்கப்பூர்வமான தேர்தல் வியூகங்களை வகுக்க வேண்டும் என்பது பெரும்பாலான அதிரையர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த எதிர்பார்ப்பை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சரி செய்யுமா இல்லை கண்டும் காணாமல் படுத்துறங்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter