அதிரை நகராட்சி தேர்தலில் இரட்டை (இலை) சின்னத்தில் போட்டியிட்டால் ஒத்த ஓட்டு பாஜக நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் என அஞ்சும் அதிமுக, முஸ்லீம் போர்வையில் இருக்கும் நகர நிர்வாகிகளின் குடும்பத்தினரை சுயேட்சையாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் அதிரையின் பிரதான பகுதியில் இருக்கும் கட்சியின் முஸ்லீம் பிரமுகர் ஒருவரது வீட்டிற்கு அதிமுக-வின் முக்கிய புள்ளி ஒருவர் வருகை தந்துள்ளார். அப்போது உள்ளூர் நகர பிரமுகர்களும் அவரோடு அந்த வீட்டிற்கு சென்று தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் ஆதரவு அலைவீசாத அனைத்து வார்டுகளிலும் சுயேட்சை சின்னத்தில் அதிமுக-வினரை களமிறக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தேர்தலில் நிற்கும் சுயேட்சைகளின் பின்னணி அறிந்து மக்கள் தெளிவாக செயல்பட வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிரை முஸ்லீம் பிரமுகர் வீட்டிற்கு இரவோடு இரவாக வந்த அதிமுக முக்கிய புள்ளி!
65