தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இயக்கி வரும் இக்ரா இஸ்லாமிக் மக்தப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (05/12/2017) இமாம் ஷாபி மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டு விழாவில் பல சிறு பிஞ்சி குழந்தைகள் ஒட்டப்பந்தையம் போன்ற பல விதமான போட்டிகளில் கலந்துகொண்டு பார்வையாளர்களை கவர்த்தனர்.
இவ்விழாவில் பிள்ளைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
பல பிள்ளைகளின் பெற்றோர்களும்,அப்பிள்ளைகளின் ஆசிரியர்களும் ,பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.
இப்பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு மற்ற பள்ளிகளை விட வித்தியாசமான முறையில் படம் நடத்துவது, பிள்ளைகளை ஊர் அருகாமையில் சுற்றுலா அழைத்து செல்வது போன்ற பல வித்தியாசமான விஷயங்கள் செய்து சிறப்பித்து வருவது குறுப்பிடத்தக்கது.