நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திமுக வெளியிட்டுள்ள 5ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி இடம்பெற்றுள்ளது.
அதன்படி மொத்தம் உள்ள 27 வார்டுகளில், 23 வார்டுகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. வார்டு எண் 13, 19, 21, 24 ஆகியவை திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.