இஸ்லாமிய விசாரணை சிறைவாசிகள் விடுதலையில் திமுக இழைத்த துரோகம், வார்டு மறுவரையரை குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் அதிரை நகராட்சி தேர்தலில் திமுக அலை ஓய்ந்து சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசுகிறது. இதனிடையே நடப்பு நகராட்சி தேர்தலில் SDPI, OSK, MJK ஆகியவை கூட்டணியாக தேர்தலை சந்திக்கின்றன. திமுக, அதிமுக, வேட்பாளர்கள் விபரம் வெளியான நிலையில், SDPI தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 6வது வார்டு மர்ளியா அஹமது அஸ்லம், 7வது வார்டு காமிலா முஹம்மது மீராசா, 8வது வார்டு ஷேக்தாவூது, 9வது வார்டு ஷாஃபிர் அஹமது, 10வது வார்டு ரபீகா சலீம், 12வது வார்டு சகீனா அஹமது, 13வது வார்டு பெனாசீரா முஹம்மது அஜாருதீன், 14வது வார்டு அபுல்ஹசன், 18வது வார்டு தஸ்லீமா சம்சுதீன், 19வது வார்டு உம்மு குல்தூம் ரியாஸ் அஹமது, 20வது வார்டு பஷீர் அஹமது, 21வது வார்டு நசீர் அஹமது, 22வது வார்டு மாஜிதா, 23வது வார்டு முஹம்மது ஜாவித் ஆகியோர் SDPI சார்பில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தான் அதிரை SDPI-ன் வேட்பாளர்கள்!!
148