அதிராம்பட்டினம் முத்தமாள் தெரு கிராமவாசிகள் இன்று திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாகிகள், தெரிவிக்கையில்,தலித்கள்,ஆதிதிராவிட மக்கள் அதிகளவில் இருக்க கூடிய வார்டு எண் 18ஐ பொது வார்டாக மாற்றி தங்கள் பகுதிக்கு துரோகம் இழைப்பதாக பலமுறை அரசுக்கு மனுக்கள் மூலமாக தெரிவித்தும் பலனில்லை.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனிவார்டாக இருந்த நிலையில்.அதன்பின் சுழற்சி முறையில் தனி வார்டாக மாற்றப் படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், அடையாள உண்ணாவிரதம் இன்று காலை 10மணியளவில், அம்பேத்கர் பெரியார் பூங்காவில் நடைபெற்றது, இதில் 100க்கணக்கான அப்பகுதி மக்கள் பங்கேற்று கோசமிட்டனர்.
முன்னதாக இந்த உண்ணாநிலை போராட்டத்திற்கு விசிக, அதிமுக,
நாம் தமிழர்,OSK,தமுமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வாழ்த்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் போராட்ட குழுவினர் தெரிவித்ததாவது, எங்களின் கோரிக்கை வெல்லும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,அதன் தொடர்ச்சியாக ஆதார்,ரேசன் உள்ளிட்ட ஆவணங்களை தாசில்தார் வசம் ஒப்படைக்கும் போராட்டம் நாளை காலை நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.