87
அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த முகம்மது ஃப்ஜ் லுதீன், துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடந்த மாதம் அங்குள்ள ஜைபா எனும் நகை கடையில் நகை வாங்கியபோது வாடிக்கையாளர்களுக்கான பரிசு கூப்பனை பூர்த்தி செய்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில், அவரை தொடர்புகொண்ட நகை கடையினர் 250கிராம் தங்கத்திற்கான வெற்றியாளராக தங்களை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் திக்குமுக்காடிபோன முகம்மது ஃபஜ்லுதீன், துபாயில் உள்ள ஜைபா நகை கடைக்கு சென்று தனக்கான தங்கத்தை பெற்றுக்கொண்டார்.