55
அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில் போட்டியிட 25வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் சம்பத்.வேட்புமனு பரிசீலனை தினமான இன்று, இவரது மனுவை வரிபாக்கி உள்ளது என்று கூறி தேர்தல் அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் ஈசிஆர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.