1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி மதவாத சக்திகளால் இந்தியாவின் ஒட்டு மொத்த இறையாண்மையும் சிதைக்கப்பட்டது.
வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பையும் மதவாத சக்திகளை கண்டித்தும், இடிக்கப்பட்ட பள்ளியை அதே இடத்தில் மீட்டெடுக்கவும் அதிரை நகர தமுமுக சார்பில் தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிரையிலிருந்து சுமார் 30 வேன்கள் மூலம் இயக்க வேறுபாடின்றி பலரும் கலந்துக் கொள்ள தஞ்சை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.