Home » சுயேட்ச்சை சின்னமான தண்ணீர் குழாய்க்கு பெருகும் ஆதரவு : தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்!!

சுயேட்ச்சை சின்னமான தண்ணீர் குழாய்க்கு பெருகும் ஆதரவு : தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்!!

by admin
0 comment

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலையொட்டி சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 9 நாட்களே மீதமுள்ள நிலையில், அதிரையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியில், மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில், சுயேட்ச்சை வேட்பாளர்களுக்கு, தென்னைமரம், அசைந்தாடும் நாற்காலி, வைரம், தண்ணீர் குழாய், மேற்சட்டை (கோட்) ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் கோட்டையாக திகழ்ந்து கொண்டிருக்கும் அதிரையில், ஆளும் திமுக அரசு வார்டு மறுவரையரையில் குளறுபடிகள் செய்துள்ளதாக கூறி அதிரை நகர மக்கள் திமுக அரசின் மேல் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனால் சமூக கட்சி சுயேட்சைக வேட்பாளருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter