அதிராம்பட்டினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் விறுவிறுப்பாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
அதிரையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் நான்கிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நமதூரின் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் பொதுவாகவே சுற்றுசூழலில் பாதுகாக்கும் நோக்கில் அமைத்துள்ளது.
இந்நிலையில் , அதிரை 19வது வார்டான கீழதெருவில் நேற்று மழை பெய்ததால் வீடுகள் சுற்றி மழை நீர் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் , நோய் பரப்பும் கொசுக்களின் அபாயம் பெருக்கெடுத்துள்ளது.
ஆனால், அப்பகுதியில் தற்பொழுது வரை வாக்கு கேட்க வந்த வேட்பாளர்கள் ஒருவரையும் காணவில்லையாம்.
தேர்தல் களம் சூடுபிடித்தாலும் இப்பகுதியில் தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வேட்பாளர் முன்வருவார் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.


