தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.
மாரிமுத்து, பேரூராட்சி துப்புறவு பணியாளரான இவர் இன்று அதிகாலையில் அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் HERO SPELNDER TN -49 As-3690 என்ற வாகன எண் கொண்ட வண்டியை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் வாகனம் திருட்டு போயுள்ளது.இதனை கண்ட மாரிமுத்து அதிர்ச்சியடைந்து,வாகனத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அண்மைகாலமாக அதிரையில் திருடர்களின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி தராத காவல்துறை திருடர்களின் திருட்டை மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறது.மேலும் காவல்துறையில் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க செல்கையில் புகாரை வாங்குவதில்லை என்றும்,தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும்,லஞ்சம் கேட்கப்படுவதாகவும் வாகனத்தை தொலைத்தவர்கள் காவல்துறை மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.