88
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் தணிந்து, வானம் மேகமூட்டத்துடனேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மெல்ல ஆரம்பித்த மழை, அவ்வப்போது கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது. மழையுடன் சேர்த்து குளிர்ந்த காற்றும் அடிப்பதால், அதிரையின் வானிலை ஊட்டியை போன்று உள்ளது.