136
அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் ஜுரம் அதிகரித்தே செல்கிறது. இந்த நிலையில் 24வது வார்டான கடற்கரை தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு பிரதிநிதியாக சுயேட்சை சின்னமான தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடும் ஹாஜா நஜ்முதீன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் கூறுகையில்,
வாக்குறுதிகள் கொடுத்தால், செய்து கொடுக்க இறைவன் ஆயுளை தர வேண்டும் என்றும் நான் உயிரோடிருந்தால், எனது வார்டிற்கு உட்பட்ட வடிகால் பிரச்சனையை நிச்சயமாக தீர்ப்பேன் எனவும், அதற்கு வார்டு மக்களாகிய நீங்கள் வரவிருக்கின்ற அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற தேர்தலில் தமக்கு தண்ணீர் குழாய் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்.