Home » நான் முஸ்லீம் லீக்கில் இல்லை – சமூக – ஆர்வலர் கன்ஜுல்!

நான் முஸ்லீம் லீக்கில் இல்லை – சமூக – ஆர்வலர் கன்ஜுல்!

0 comment

திமுக அனுதாபியும், சமூக ஆர்வலருமான கன்ஜுல் அஹமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் தெரிவித்ததாவது,

நான் 1979 முதல் திமுக கட்சியின் உறுப்பினராக இருந்து வருபவர் என்றும், தமது தந்தையார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தீவிர பற்றாளர் ஆவர்.

எனது தந்தையின் மரணத்திற்கு பின், மரியாதை நிமித்தம் எங்களின் இல்லத்திற்கு முஸ்லீம் லீக்கினர் வந்து செல்வது வழக்கம் என்றும் அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லீம் லீக்கினர் எங்களின் இல்லத்திற்கு வந்தனர் என்றும் மரியாதை நிமித்தமாக அவரை வரவேற்றேன் என்றும், இதனை அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகமும் தாம் முஸ்லீம் லீக்கில் இணைந்து விட்டதாக கூறி செய்தி வெளியிட்டது என்றும்
அதிரை எக்ஸ்பிரஸை தொடர்பு கொண்ட கன்ஜுல், செய்தியை நீக்க கோரினார்.

செய்தியை கொடுத்த முஸ்லீம் லீக்கினர் இது தகவல் கொடுத்தும் மெளனம் சாதிப்பதால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்தார்.

மேலும் தாம் இந்த நிமிடம் வரையில் திமுகவில்தான் நீடிக்கிறேன் என்றும், யாருக்காவும் எதற்க்காகவும் கொள்கையை விட்டு மாற்று கட்சிக்கு தாவும் மனோ பக்குவத்தில் நானும் இல்லை நான் சார்ந்துள்ள திமுகவும் என்னை அப்படி வழி நடத்தவில்லை என கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter