47
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை, 25,269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதில் பெருவாரியான வாக்குகள் அதிரையிலிருந்து கிடைத்ததாகும். 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டையை திமுக கைப்பற்றிய சூழலில் தேர்தலுக்கு முன்புவரை அதிரை சந்து பொந்துகளில் எல்லாம் வாக்கு கேட்டு வந்த அவர், தேர்தல் முடிந்ததும் நன்றி சொல்ல வர மறந்தது ஏன் என தெரியவில்லை என்று ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் மனகுமுறலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு திமுக எம்.எல்.ஏ, அதிரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.