47
அதிரை 14வது வார்டில் திமுக சார்பில் இன்பநாதன், அதிமுக சார்பில் சிவக்குமார், சுயேச்சையாக ராஜசேகரன், SDPI சார்பில் அபுல்ஹசன் ஆகியோர் களம் காணுகின்றனர். பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று, அனைத்து வேட்பாளர்களும் தங்களது பலத்தை காட்டிவிட வேண்டும் என்ற ரீதியில் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வாக்குகேட்டு செல்கின்றனர். இந்நிலையில் 14வது வார்டில் SDPI சார்பில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் அபுல்ஹசன், எந்த ஒருவிதமான அலப்பறைகளும் இல்லாமல் வீடுவீடாக சென்று வாக்கு கேட்டு வருகிறார்.