Home » முதலில் அதிரையின் காற்று பாதிக்கும்! பின் மரண ஓலம் துவங்கும்!! கார்ப்ரேட் அரசியல்!

முதலில் அதிரையின் காற்று பாதிக்கும்! பின் மரண ஓலம் துவங்கும்!! கார்ப்ரேட் அரசியல்!

by அதிரை இடி
0 comment

2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைப்போம் என தனது தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்கள், உடனடியாக காஸ்டிக் சோடா தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட வாயு மற்றும் கழிவுகளால் ஏற்பட கூடிய கேன்சர், சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கினர். உடனே அந்த கட்சி பின் வாங்கியது.

அத்தோடு எல்லாம் முடிந்தது என எண்ணினோம். ஆனால் 2021 தேர்தலில் அதே வாக்குறுதியை மீண்டும் தனது தேர்தல் அறிக்கையில் திமுக இடம்பெற செய்கிறது. இந்தமுறை காஸ்டிக் சோடா தொழிற்சாலை குறித்து வெளியில் பகிரங்கமாக சொல்லாமல் அப்படியே மூடி மறைக்கின்றனர் திமுக புள்ளிகள். யாரை திருப்தி படுத்த அவர்கள் இப்படி மல்லுக்கட்டுகின்றனர். யாருக்காக ஒன்றும் அறியா அதிரை குழந்தைகளை கேன்சர், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு இறையாக்க விரும்புகின்றனர். எதுவும் தெரியவில்லை.

ஒரு விஷயத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதை அப்படியே விட்டுவிடுவது தான் மக்களுக்கான கட்சி செய்யும் அரசியல். ஆனால் முதலில் அதை விடுவதுபோல் நடித்து மக்களை ஏமாற்றி கொள்ளைப்புறமாக அந்த உயிர்கொல்லி திட்டத்தை அதிரைக்கு கொண்டு வருவது நியாயமா?

கருப்பு, சிகப்பு கொடியை பைக்கிலும் காரிலும் பறக்கவிட்டு செல்லும் எந்த ஒரு மனிதனுக்கும் காஸ்டிக் சோடா பாதிப்பு குறித்த அறிவு இல்லை அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் தனது பேரபிள்ளையை பலிகொடுக்க முயல்கின்றனர். அவர்களுக்கு கட்சியின் கரை வேட்டி தான் எல்லாம். மனைவி, பிள்ளைகள், சமுதாயம் அடுத்த பட்சம் தான்.

இனியும் காஸ்டிக் சோடா தொழிற்சாலைக்கு பின் இருக்கும் கார்ப்ரேட் அரசியலை பற்றி பேச தவறினால் இழப்பு நமக்கு, லாபம் கரை வேட்டிக்கு.

அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். சிந்திப்பீர்… செயல்படுவீர்…

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter