64
அதிரை நகராட்சி தேர்தலில் ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, SDPI, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து களம் காணுகின்றன. இதுதவிர திமுக கூட்டணி, காங்கிரஸ், சுயேச்சைகளும் தனியாக களத்தில் உள்ளனர். நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில், இன்றைய அதிரை ஜும்ஆ மேடைகளில் பேசிய கண்ணியமிக்க இமாம்கள், ஓட்டுக்கு பணம் வாங்குவது இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும், சமுதாயத்திற்கு சேவை செய்ய கூடிய நேர்மையான பொறுப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.