90
அதிரையில் கஜா புயல் பேரழிவில் மீட்பு பணி, கொரோனா கால ஊரடங்கின்போது அதிரைக்கு பால் கொண்டுவந்தது, நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கி கொடுத்தது உள்ளிட்ட சேவைகளால் வைரம் மற்றும் தென்னை மரத்திற்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை மக்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலையில் இரட்டை வேடம், அதிரை வார்டு மறுவரையரை குளறுபடி, கேன்சரை உருவாக்கும் காஸ்டிக் சோடா உள்ளிட்ட விவகாரங்களால் சூரியவம்சம் குடும்பத்தினருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காசு பணத்தை வாரி இறைத்தபோதும் அசராத அதிரையர்கள், வைரத்தில் வைராக்கியமாகவும் தென்னை மரத்தில் திடமாகவும் உள்ளனர்.