37
அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் கலந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட நிலையில், ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனத்தின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் அந்த பள்ளிக்கு கற்கள் அடித்து கொடுத்தனர். இந்த பணியை அரசு பதிவுபெற்ற பொறியாளரும் ஆமினா’ஸ் இயக்குனருமான முகம்மது அபூபக்கர் நேரில் பார்வையிட்டார்.