அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்தும்,நீதியான தீர்ப்பு வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.அதனின் தொடர்ச்சியாக அதிரை நகர மஜக சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பேரணி தக்வா பள்ளியில் ஆரம்பித்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுசெயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கண்டன உரையாற்றினார்.
பாபர் மஸ்ஜித் இடித்தவர்களுக்கு தக்க தண்டணையை நீதிதுறை பதிவு செய்யவேண்டும் என்று கண்டன குரலை பதிவு செய்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையை சுற்றியுள்ள பொதுமக்களும் பங்கெடுத்தனர்.