அதிரை எக்ஸ்பிரஸ்:- பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக இன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை கண்டித்து நீதிகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று காலை 11 மணிக்கு SDPI கட்சி சார்பாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் Z.முகமது இல்யாஸ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் SDPI மாநில பேச்சாளர் மஹ்பூப் அன்சாரி பைஜி,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள்,பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர்.