அதிரை வரலாற்றில் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளிலும் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு வந்த வாக்காளர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு நிருபர்கள் நேரடி கருத்துக் கணிப்பு நடத்தினர். அதனைத் தொகுத்து மூன்று பாகங்களாக அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.
இது நமது வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு 55.5% சதவீதம் மெய்யாகியுள்ளது.
அதாவது மொத்தமுள்ள 27 வார்டுகளில் 15 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அதிரை எக்ஸ்பிரஸ் – ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படியே அமைந்துள்ளது.
அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முதல் முயற்சியிலேயே 55.5 சதவீதம் சரியான கருத்துக் கணிப்பை வாசகர்களுக்கு அளித்திருப்பது உண்மையிலேயே மனநிறைவை தருகிறது.
இனி வரக்கூடிய காலங்களில் அதிரையின் அரசியல் சூழல், பொருளாதார நிலை, சமூக பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை நன்கு கவனித்து மிக மிக துல்லியமான கருத்துக் கணிப்புகளை தர அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு முயற்சிக்கும்.


