அதிரை நகராட்சி தேர்தல் முடிவுகளை பிரபல தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இணையாக அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்தது. இதனை பார்க்க அதிரை எக்ஸ்பிரஸ் யூடியூப் பக்கத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை இணைப்பில் வந்தனர். பின்னர் அந்த வீடியோ 11,814 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் 15,494 முறை பார்த்துள்ளனர். சிலர் தங்களது வீடுகளில் உள்ள ஸ்மார்ட் டி.விக்களில் அதிரை எக்ஸ்பிரஸ் நேரலையை குடும்பத்தோடு அமர்ந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவர்கள் பிறருக்கு சொன்னதன் மூலம் அதிரையின் பட்டித்தொட்டி எங்கும் அதிரை எக்ஸ்பிரஸ் நேரலையின் தாக்கம் சென்று சேர்ந்திருப்பதை உணர முடிகிறது. இந்த ஹிட் சாத்தியமானது வாசகர்களாகிய உங்களால் தான்… நன்றி… நன்றி… நன்றி…
ஹிட் அடித்த அதிரை எக்ஸ்பிரஸ்! வாசகர்களால் தான் இது சாத்தியம்!!
69
previous post