உக்ரைன் மீதான ரஷ்சியாவின் தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அனைவரும் அவர்களின் தூதரகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் வாழ் அதிரையர்களை தொடர்புக்கொள்ள நாம் முயற்சித்தோம். அந்த வகையில் உக்ரைனில் வாழும் 2 அதிரையர்களின் தொடர்பு நமக்கு கிடைத்துள்ளது. அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் அதிரையர்கள் 2 பேரும் நாடு திரும்ப இருக்கிறார்கள்.
மேலும் உக்ரைன் வாழ் அதிரையர்களை அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து ஒருங்கிணைப்பு செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் அதிரை எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது. உக்ரைன் வாழ் அதிரையர்கள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களை தொடர்புக்கொள்ளவும்.
-அதிரை எக்ஸ்பிரஸ்
+91 9551070008, 9500293649, 9944426360