தியாகம் இல்லாது பெறும் பாக்கியங்களின் சிறப்பை மனிதன் சிந்திக்க மாட்டான் என்பது நம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்க்கு முழுமையாக பொருந்தும்
பெண்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்று சர்ச்சை செய்த காலத்திலேயே பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கியது இஸ்லாம்
பெண் என்பவள் ஆடவர்கள் ரசித்து பார்க்கும் ஒரு போகப் பொருள் அல்ல அவளும் கண்ணியம் நிறைந்தவள் நாணம் மிகுந்தவள் என்பதை உலகிற்க்கு பாடம் நடத்தி பெண் இனத்தையே பாதுகாத்தது இஸ்லாமிய மார்க்கம்
அத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்ற கடமை பட்டுள்ள முஸ்லிம் இளைய பெண்களில் பலர்கள் இன்று சுதந்திரம் எனும் பெயரில் சீரழிவதையும் அவர்கள் சீரழிவதோடு பிறர்களையும் அவர்களின் நடைமுறைகளால் சீரழிப்பதையும் சர்வ சாதாரணமாக காண முடிகிறது
பெற்றோர்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை செலுத்தும் பொருப்பாளர்கள் காதில் பூவை சுற்றி விட்டு வேலைக்கு செல்கிறோம் எனும் பெயரில் கல்லூரி செல்கிறோம் எனும் பெயரில் காதல் பெயரால் அந்நிய ஆடவர்களோடு ஊர் சுற்றுவது அந்த ஆடவர்களால் தன்னுடைய வாழ்கை நாசமாகும் போது ஒப்பாரி வைத்து ஆடவர்களின் மீது மாத்திரம் பழி சுமத்தி கபட நாடகம் ஆடுவது இன்று சில முஸ்லிம் பெண்களுக்கு கை வந்த கலையாக மாறி வருகிறது
இதற்க்கு மூல காரணம் அவர்களின் பெற்றோர்கள் என்பதில் கடுகளவு சந்தேகமும் இல்லை
வெட்க உணர்வையும் நபித்தோழியர்களான பெண்களின் கட்டுப்பாடு நிறைந்த வாழ்கை முறைகளை கற்று தர வேண்டிய பெற்றோர்களே தனது பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டு
எப்போதும் தொலைகாட்சியில் சினிமாக்களையும் சீரியல்களையும் நடிகர் நடிகைகளின் பேட்டிகளையும் மானாட மயிலாட போன்ற குத்தாட்ட கும்மளாட்ட நிகழ்ச்சிகளையும் எந்த விதமான வெட்க உணர்வும் இல்லாது குடும்பத்தோடு கண்டு வருகின்றனர்
நிஜத்தை பார்க்க வேண்டிய முஸ்லிம் இளம் பெண்களின் கண்கள் எப்போதும் கற்பனைகளை பார்த்து பழக்கப்பட்டதால் மார்க்க ஈடுபாடு என்பது மருந்துக்கு கூட பல இளம் பெண்களிடம் காண முடியவில்லை
பெண்களை அதிகமாக நான் நரகத்தில் பார்த்தேன் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கே முன்னுதாரணமாக இருப்பது தற்போது நம் முஸ்லிம் இளம் பெண்கள் என்று சொன்னால் அது மிகையாகாது
அதிலும் குறிப்பாக கேரளாவில் உள்ள பல முஸ்லிம் இளம் பெண்கள் வழிகேட்டின் உச்சிகளையே தொட்டு பார்த்தவர்கள் என்றும் கூட அந்த பெண்களை பற்றிய ஒரு பார்வை தற்போது அதிகரித்து விட்டது
நடிகைகள் கூட படங்களில் குத்தாட்டம் ஆடி விட்டு மக்கள் கூடும் வீதிகளில் நாகரீகமாக செல்வார்கள்
ஆனால் கேரளா மலப்புரத்தை சார்ந்த சில முஸ்லிம் இளம் பெண்கள் சென்ற வாரம் பொது ரோட்டிலே குத்தாட்டம் ஆடி சாதனை படைத்து முஸ்லிம் சமுதாயத்திற்க்கு அவமானத்தை தேடி தந்துள்ளனர்
பொது இடத்தில் குத்தாட்டம் ஆடும்
இஸ்லாமிய இளம் பெண்கள்
வீடியோ லின்ங் கீழ் உள்ளது
https://youtu.be/sWFUPOjLZBk
தொலைகாட்சி மற்றும் மொபைல் மூலம் வழிகெட்டு பெற்றோரை மீறி இந்துவுக்கு பின்னால் காதல் பெயரால் சீரழிந்து தற்போது இரு குழந்தையோடு இளம் பருவத்திலேயே வருந்தும்
சகோதரி கோவை சபூரா கண்ணீருடன் முஸ்லிம் பெண்களுக்கு கூறும்
செருப்படி போதனை லின்ங்
https://youtu.be/sFvEb_W0p4o
பெற்றோரை ஏமாற்றி அழ வைத்து விட்டு இந்துவின் பின் காதல் பெயரால் சென்று சீரழிந்து பர்தாவையும் அணிந்து கொண்டு இந்து காதலனிடம் மடி பிச்சை கேட்கும் முஸ்லிம் பெண் நிகழ்சி
சொல்வதெல்லாம் உண்மை
முஸ்லிம் இளம் பெண்களில் அநேகமானவர்கள் எந்த நடிகைகளின் ஆடம்பர வாழ்வை பார்த்து மதி மயங்கி தரம் கெட்டு திரிகிறார்களோ அந்த நடிகைகளில் சிலர்கள் அவர்களுக்கு எளிதாக வருமானம் தரும் சினிமா தொழிலையே தூக்கி எறிந்து விட்டு முஸ்லிம் பரம்பரையான இளம் பெண்களுக்கே முன்னுதாரணமாக திகழ்கின்றனர்
அதில் ஒருவர் தான் தமிழில் அழகி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வலம் வந்தவர்
நடிகை மோனிகா
சினிமாவில் கூச்சமின்றி நடித்த அந்த பெண் இஸ்லாத்தை ஏற்று தற்போது இஸ்லாம் கூறும் விதம் ஆடை அணிந்து முஸ்லிமை திருமணம் செய்து இஸ்லாத்தின் மகிமையை விளக்கி கூறும் வீடியோவும்
மார்க்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று உரை நிகழ்த்துவதும்
இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளை எடுத்து கூறுவதும்
நம் பரம்பரை முஸ்லிம் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பாடமாகும்
எதிர்பார்ப்புடன்
J .இம்தாதி
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْن
(அதற்கு இப்லீஸ்
என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்
(அல்குர்ஆன் : 15:39)
وَالْمُؤْمِنُوْنوَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْم
ٌ முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர் அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்
தீயதை விட்டும் விலக்குகிறார்கள் தொழுகையைக் கடை பிடிக்கிறார்கள் (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான்
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 9:71)
முற்றும்