77
அதிரையில் திமுக சார்பில் வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர்கள் நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பேசினர். நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வரும் 2ம் தேதி வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை மக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் சசிக்குமாரிடம் திமுகவினர் வலியுறுத்தினர்.