124
அதிரை பழஞ்செட்டி தெருவில் உள்ள போஸ்ட் ஆபிசில் ஆதார் முகாம் நடைபெறுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து அதிரையர்கள் கூட்டம் கூட்டமாக போஸ்ட் ஆபிசிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்று பார்த்தால் அவ்வாறான முகாம் நடைபெறுவதற்கான சுவடுகள் ஏதும் தென்படவில்லை. வந்தவர்கள் எல்லாம் ஆதார் முகாம் குறித்து கேள்வி எழுப்பியதால் பதில் சொல்ல முடியாத அஞ்சலக ஊழியர்கள், ஒரே போடாக “இங்கு ஆதார் முகாம் நடைபெறவில்லை” என எழுதி வாசலில் ஒட்டிவிட்டனர்.