103
அதிரை நகராட்சி மன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. இந்தமுறை பெண்ணுக்கு மன்ற தலைமைதத்துவம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் அதிரை நகராட்சி மன்ற தலைவி யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் நகராட்சி மன்ற தலைவி நகர்வலம் வந்து மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய ஏதுவாக அந்த தலைவிக்கு என பிரத்யேக ஜீப் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிரை நகராட்சி ஆணையருக்கென தனி கார் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.