Home » அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!

அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி! இருதரப்பும் தேர்தல் களம்காண வாய்ப்பு!!

0 comment

அதிரை நகராட்சி மன்றத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்த போதிலும் உட்கட்சிபூசல் காரணமாக நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் 40 ஆண்டுகால சாம்ராஜியத்தை அதிரையில் வீழ்த்தி 5 ஆண்டுகாலம் வனவாசம்போல் எந்த ஒரு அதிகாரமுமின்றி நகரமன்ற தலைவராக இருந்த தனக்கு தான் தலைவர் பதவியை தர வேண்டும் என ஒரு தரப்பு சமூக வலைதளங்களில் கூறி வருகிறது.

அதேசமயம் அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து சண்டை சச்சரவுகளின்றி எல்லோருக்குமான நிர்வாகத்தை வழங்கி வந்த தங்களுக்கு தான் நகர தலைவர் பதவியை தர வேண்டும் என மற்றோரு தரப்பும் கூறுகிறது.

இத்தகைய சூழலில் தனிப்பெரும்பாண்மை கிடைத்தபோதிலும் அதிரை நகர்மன்ற தலைவியை தேர்வு செய்வதில் திமுகவில் கடும் இழுபறி நிலவுகிறது. அதேபோல் தலைமை டிக் செய்யும் ஒருவரை எதிர்த்து மற்றோருவர் களம் காணவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நகர்மன்ற தலைவர் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் கொள்கைக்கு எதிராக வாக்களித்தாலும் வார்டு உறுப்பினர் பதவி பறிபோகாது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter