Home » அதிரையில் இருசக்கர வாகனத்தில் சிட்டாய் பறக்கும் சிறுவர்கள் ..!!

அதிரையில் இருசக்கர வாகனத்தில் சிட்டாய் பறக்கும் சிறுவர்கள் ..!!

by
0 comment

அதிராம்பட்டினம் பகுதியில் பள்ளி படிக்கும் சிறுவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதும் பள்ளி முடிந்ததும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுபாடு இல்லாமல் ஓட்டிச்செல்வதும், ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.மேலும் சிறார்கள் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறார்களின் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்குத் தான் ஆனால் இங்கு பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் அதிகமாக வாகனத்தில் சுற்றி திரிகின்றனர்.எனவே மாணவர்களின் எதிர்காலம் கருதி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

(புகைப்படம் இணைப்பு)

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter